பனிப்பாறைகள் நிறைந்த அண்டார்டிகாவில் முதன்முறையாக ஏர்பஸ் விமானம் தரையிறங்கி சாதனை படைத்துள்ளது.
ஹைஃபிளை என்ற தனியார் விமான நிறுவனம் தனது ஏர் பஸ் ஏ340 ரக விமானத்தை தரையிறக்கி இந்த சாதனையை படைத்துள்ளது. தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் இருந்து புறப்பட்ட இந்த விமானம், 2,500 நாட்டிகல் மைல்கள் தூரம் பறந்து, அண்டார்டிகாவில் உள்ள வுல்ஃப்ஸ் ஃபேங் நிறுவனத்தின் சாகச சுற்றுலா முகாமிற்கு தேவையான பொருட்களை சேர்த்தது.
இது தொடர்பாக தெரிவித்த விமானி கார்லோஸ் மிர்புரி, விமானம் தரையிறங்கும் வகையில் தற்காலிகமாக இறங்குதளம் தயார் செய்யப்பட்டிருந்ததாகவும், தரையிறங்குவதில் ஏதும் பிரச்சனை ஏற்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.