கொலம்பியா தலைநகர் போகோடாவில் 300 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான 10 டன் கொக்கைனை பறிமுதல் செய்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் Diego Molano தெரிவித்துள்ளார்.
இடது சாரி கிளர்ச்சியாளர்களை நடத்தி வந்த 2 சட்டவிரோத போதைப் பொருள் ஆராய்ச்சிக் கூடம் குறித்து கிடைத்த தகவலை அடுத்து ரெய்டு நடந்ததாக மொலனோ தெரிவித்தார். 2 ஆராய்ச்சிக் கூடமும் அழிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
நடப்பாண்டில் பறிமுதல் செய்யப்பட்ட உச்சபட்ச கொக்கைன் என்றும், போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களால் மட்டும் இதுவரை 2 லட்சத்து 60 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக மொலனோ தெரிவித்தார்.