பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவுக்கு அருகே, போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு எதிரான தேடுதல் வேட்டையின் போது, 7 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அவர்கள் போலீஸாரால் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக, சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த வாரம், காவல்துறை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், இச்சம்பவம் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
ரியோ டி ஜெனிரோ நகரையொட்டி அமைந்துள்ள, மாங்குரோவ் காடுகளுக்கு நடுவே வசிக்கும் மக்கள், போதைப் பொருள் கடத்தி விற்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில், அங்கு போலீஸார் அடிக்கடி சோதனை நடத்துவது வழக்கம்.
இந்தாண்டு மட்டும், அப்பகுதியில் இதுவரை ஆயிரத்து 96 பேர், போலீஸ் அதிகாரிகளால் கொல்லப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.