ரஷ்யாவில் ஒருநாள் கொரோனா உயிரிழப்பு மீண்டும் ஆயிரத்து 250-ஐ கடந்து உச்சம் தொட்டது.
அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 37 ஆயிரத்து 120 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகி உள்ளது. புதிய பரவல் எண்ணிக்கை குறையத் தொடங்கினாலும் உயிரிழப்பு அதிகரித்துக் கொண்டே செல்வதாக ரஷ்ய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.