அமெரிக்காவில் இனவெறிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இருவரை சுட்டுக் கொன்ற நபர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், போலீசாரை கார் நிறுத்துமிடத்துக்குள் வைத்து முடக்கினர்.
கடந்தாண்டு இனவெறிக்கு எதிராக விஸ்கான்சினில் போராட்டம் வெடித்த போது, அங்குள்ள கார் ஷோரூமில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த கைல் ரிட்டன்ஹவுஸ்என்ற 18 வயது இளைஞர் தன்னைத் தாக்கிய இருவரை தானியங்கி துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.
தற்காப்பிற்காக அவர் துப்பாக்கி சூடு நடத்தியதால் நீதிமன்றம் அவரை விடுவித்தது. இந்தத் தீர்ப்பை கண்டித்து போர்ட்லேண்ட்-டில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாரை முற்றுகையிட்டனர். பின்வாங்கிய போலீசார் கார்கள் நிறுத்தப்படும் காரேஜுக்குள் முடங்கினர்.