ஒலியை விட ஐந்து மடங்கு வேகமாக சென்று இலக்கை தாக்கி அழிக்கும் சிர்கான் வகை ஹைபர்சோனிக் ஏவுகணையை சோதித்து பார்த்ததாக ரஷ்யா அறிவித்துள்ளது.
கப்பலில் இருந்து செலுத்தப்பட்ட ஏவுகணை பேரண்ட்ஸ் கடல் பகுதியில் இருந்த இலக்கை துல்லியமாக அழித்ததாக ரஷ்ய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் கருங்கடல் பகுதியில் நேட்டோ படைகள் பயிற்சியில் ஈடுபட்டதற்கு அதிபர் புதின் கண்டனம் தெரிவித்த நிலையில், ரஷ்யாவின் திடீர் ஏவுகணை சோதனை ஐரோப்பிய நாடுகளுக்கு மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.