அமெரிக்க புலனாய்வு நிறுவனமான FBI-யின் இ மெயில் சிஸ்டம் ஒன்றை மர்ம நபர்கள் ஹேக் செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹேக்கர்கள் குறிப்பிட்ட அந்த இ-மெயில் சிஸ்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்ளை அனுப்பியதால் FBI தலைமையகம் குழப்பம் அடைந்தது.
ஆனால் இந்த இ-மெயில் சிஸ்டம், FBI அதிகாரிகளும் இதர பணியாளர்களும், பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்க பயன்படுத்தப்படக்கூடியது என்றும், பாதுகாக்கப்பட்ட அரசு தகவல்கள் எதுவும் ஹேக் செய்யப்படவில்லை என்றும் இந்த சம்பவத்தை கண்காணித்த சைபர் செக்யூரிட்டி நிறுவனமான Blue Voyant தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட இ மெயில் சிஸ்டத்தில் இருந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஸ்பாம் மெசேஜ்கள் அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது ஹேக் செய்யப்பட்டது உண்மை என்றும் ஆனால் கூடுதல் தகவல்கள் எதையும் இப்போது அளிக்க இயலாது என்றும் FBI அதிகாரிகள் தெரிவித்தனர்.