13 ஆண்டு காலம் தந்தையின் முழு கட்டுபாட்டில் இருந்த பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ், அந்த ஒப்பந்தத்திலிருந்து விடுவிக்கப்படுவதாக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்க சட்டங்கள் படி, உடலளவில் அல்லது மனதளவில் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை மற்றும் பொருளாதார முடிவுகளை எடுக்க conservatorship அடிப்படையில் பாதுகாவலர் நியமிக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் புகழின் உச்சியில் இருந்த பிரிட்னி ஸ்பியர்ஸ் மனதளவில் பாதிக்கப்படுள்ளதாக கூறி அவரது அப்பா ஜேம்ஸ் ஸ்பியர்ஸ் பாதுகாவலர் பொறுப்பை ஏற்றார். இந்நிலையில் 13 ஆண்டு சட்ட போராட்டத்தின் முடிவில், பிரிட்னி ஸ்பியர்ஸ் கட்டுப்பாட்டிலிருந்து வெளியே வந்துள்ளதால் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்