அமெரிக்க பத்திரிகையாளர் டேனி ஃபென்ஸ்டருக்கு மியான்மர் ராணுவ நீதிமன்றம் 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
ஃபிராண்டியர் மியான்மர் ஆன்லைன் தளத்தின் நிர்வாக ஆசிரியராக இருந்த ஃபென்ஸ்டர், ராணுவ ஆட்சியை விமர்சித்து கட்டுரைகள் எழுதியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அவரை மியான்மர் ராணுவம் கடந்த மே மாதம் கைது செய்தது. ஃபென்ஸ்டர் குடியேற்றச் சட்டத்தை மீறியதாகக் கூறி 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஃபென்ஸ்டர் மீது தேசத்துரோகம் மற்றும் பயங்கரவாதம் ஆகிய இரண்டு கூடுதல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இதற்காக அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.