2019ம் ஆண்டு விபத்துக்குள்ளான எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்தவர்களுக்கு இழப்பீடு வழங்க போயிங் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.
எத்தியோப்பியாவில் இருந்து 157 பயணிகளுடன் சென்ற போது 737-மேக்ஸ் ரக விமானம் விபத்தில் சிக்கியது. இதில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு கேட்டு சிகாகோ மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது, உயிரிழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கத் தயாராக இருப்பதாக போயிங் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.