ஐபோன் பயனர்களை சட்டவிரோதமாக கண்காணித்ததாக குற்றம் சாட்டப்பட்ட கூகுள் மீதான நடவடிக்கைக்கு பிரிட்டன் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதியில் உள்ள லட்சக்கணக்கான மக்களின் ஐ போன்களை கண்காணித்ததாக கூகுள் நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கில் அந்நிறுவனத்திற்கு 4 புள்ளி 3 பில்லியன் அமெரிக்க டாலர் அபராதமாக விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து கூகுள் சார்பில் இங்கிலாந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதையடுத்து கூகுளுக்கு எதிராக கொண்டு வந்த சட்ட நடவடிக்கையை ஒருமனதாக நிராகரிப்பதாக இங்கிலாந்து உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.