பிரிட்டனின் கிளாஸ்கோவில் பருவநிலை மாநாடு நடந்து வரும் நிலையில், சாலை, நீர் மற்றும் விமான போக்குவரத்து காரணமாக ஏற்படும் கரியமில வாயு உமிழ்வை குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த நூற்றாண்டின் மத்தியில் கரியமில வாயு உமிழ்வை கட்டுப்படுத்தி பூமியின் தட்பவெட்ப உயர்வின் அளவை 1.5 டிகிரி செல்சியஸ்-க்குள் வைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பருவ நிலை மாற்றத்தை கட்டுப்படுத்த , மின்சார கார் பயன்பாட்டை அதிகரிப்பதோடு, நிலக்கரி பயன்பாடை குறைப்பது, வன அழிப்பை தடுப்பது உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சாலை போக்குவரத்தால் மட்டும் வெளியாகும் வாயு உமிழ்வு, மொத்த கரியமில வாயு உமிழ்வில் 10 சதவீதம் பங்கு வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், உலக நாடுகள் எவ்வளவு சீக்கிரம் மின்சார வாகனங்களுக்கு மாற முடியும் என்பதனை முடிவு செய்ய இந்த பருவ நிலை மாநாடு மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.