அமெரிக்காவுடன் இருக்கும் கருத்து வேறுபாடுகளை களைய சீனா தயாராக உள்ளது என அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனில் அமெரிக்க-சீன உறவுகள் குறித்த தேசிய கமிட்டியின் இரவு விருந்து நடைபெற்றது. அதில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் கடித த்தை அமெரிக்காவுக்கான சீன தூதர் குயின் காங் (Qin Gang) வாசித்தார். அதில் தமது விருப்பத்தை அதிபர் ஷி ஜின்பிங் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களில் அமெரிக்காவுடன் சேர்ந்து பணியாற்ற சீனா தயாராக இருப்பதாகவும் தமது கடிதத்தில் ஷி ஜின்பிங் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், ஷி ஜின்பிங்கும் அடுத்த வாரம் காணொலியில் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.