தாலிபன்கள் உலகளவிலான அங்கீகாரத்தைக் கோரும் முன்பு, ஆப்கான் மக்களின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்று இந்தியா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
டெல்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் இன்று நடைபெற உள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாட்டிற்கு முன்பாக உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகர்களுடன் அஜித் தோவல் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இன்று மாநாட்டுக்கு இடையில் அவர் ரஷ்யா, ஈரான், கஜகஸ்தான் பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தையைத் தொடர உள்ளார். எல்லை மேலாண்மை, எல்லைக் கட்டுமானப் பணிகள், பாதுகாப்பு உள்பட பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டன.