அமைதிக்கான நோபல்பரிசு பெற்ற மலாலா யூசுப்ஜாய், இங்கிலாந்தில் அசீர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்ட மலாலா, இன்றைய தினம் தமது வாழ்வில் ஒரு பொன்னான நாள் என்று குறிப்பிட்டுள்ளார். சிறிய அளவிலான நிகழ்வில், குடும்பத்தினர் முன்னிலையில் அசீரும் தாமும் திருமண பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பதாக மலாலா தெரிவித்துள்ளார்.
24 வயதான மலாலா பெண் கல்விக்கான குரல் எழுப்பியதால் தாலிபன்களால் தலையில் சுடப்பட்டு உயிர் தப்பினார்.