ஆஸ்திரேலியாவில் கடலில் நீச்சலடித்த போது சுறா மீன்களால் தாக்கப்பட்ட நபரின் உடலை தேடும் பணி நிறுத்தப்பட்டது.
பெர்த் நகர் அருகே உள்ள போர்ட் பீச்சில், கடலில் நீச்சலடித்துகொண்டிருந்த Paul Millachip என்ற நீச்சல் வீரர் சுறா மீன்களால் தாக்கப்பட்டார். படகுகள் மற்றும் ஹெலிகாப்டரில் சென்று போலீசார் தேடி வந்த நிலையில், உடலை மீட்க முடியாத நிலையில், தேடும் பணிகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில், அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவில் சுறா மீன்களால் மனிதர்கள் அதிகளவில் தாக்குதலுக்கு ஆளாகி வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.