ஹைப்பர் சோனிக் வகை ஏவுகணையை சீனா சோதனை செய்ததைத் தொடர்ந்து அதிநவீன திறன் படைத்த லேசர் ஆயுதங்களை உருவாக்க அமெரிக்கா முயன்று வருகிறது.
சீனா கடந்த சில வாரங்களுக்கு முன் ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் செல்லும் அணுசக்தி திறன் கொண்ட ஹைப்பர் சோனிக் வகையை வெற்றிகரமாகச் சோதனை செய்தது.
இதனால் அதிர்ச்சியடைந்துள்ள அமெரிக்கா, 300 கிலோ வாட் சக்தி கொண்ட உயர் ஆற்றல் லேசர் ஆயுத அமைப்பை உருவாக்குவதற்கான அனுமதி அமெரிக்க ராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. லேசர் ஆயுதம் மூலம் ராணுவத்தை நவீனமயமாக்கவும், அடுத்த தலைமுறை அச்சுறுத்தல்களை தோற்கடிக்கவும் முடியும் என அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.