ஈராக் பிரதமரை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து தலைநகர் பாக்தாத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் வெளிநாட்டு தூதரகங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சமீபத்தில் தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்து ஈராக்கில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில், பிரதமர் முஸ்டஃபா கதிமி-யின் இல்லத்தின் மீது அதிகாலை ட்ரோன் மூலம் வெடிகுண்டு வீசப்பட்டது.
பாதுகாவலர்கள் பலர் காயமடைந்த நிலையில் பிரதமர் நலமுடன் உள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்துக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ட்ரோன் கைப்பற்றப்பட்டுள்ளது.