ருமேனியாவில் கரடிகள் சென்றதை அறியாமல் பின்னால் சென்ற பெண்ணை அதே கரடிகள் விரட்டியடித்தன.
மத்தியப் பகுதியில் உள்ள சினையா என்ற இடத்தில் உள்ள வனப்பகுதியை ஒட்டிய பகுதியில் இரவு நேரத்தில் இரு கரடிகள் வீடு ஒன்றின் வழியாகச் சென்றன. இதனை அறியாத அந்த வீட்டின் உரிமையாளரான பெண், கரடிகளுக்கு பின்னால் சென்றார்.
சிறிது தூரம் சென்ற போது, திடீரென ஓடி வந்த அந்தப் பெண், கதவைப் பூட்டிய மறு விநாடியே அந்தக் கரடிகள் இரண்டும் பெண்ணை விரட்டி வந்தன. சரியான நேரத்தில் சுதாரித்ததால் அந்தப் பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.