அமெரிக்காவில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசிக்கான அனுமதி கோரியுள்ளது பாரத் பயோடெக் நிறுவனம்.
அண்மையில் உலக சுகாதார அமைப்பு கோவாக்சின் தடுப்பூசியை அவசர காலப் பயன்பாட்டுக்கு அனுமதியளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து 17 நாடுகளில் கோவாக்சின் அனுமதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பல லட்சம் டோஸ்கள் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்தப்படுகிறது.
இந்நிலையில் சுமார் 526 சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி பரிசோதிக்கப்பட்டதில் பெரிய பாதிப்புகள் ஏதுமில்லை. இதனால் 2 வயது முதல் 18 வயதுக்குட்பட்டோருக்கு செலுத்துவதற்கு அமெரிக்க அதிகாரிகளிடம் பாரத் பயோடெக் நிறுவனம் அனுமதி கோரியுள்ளது.