அத்தியாவசியப் பொருட்களை சேகரித்து வைத்துக் கொள்ளுமாறு சீன அரசாங்கம், அந்நாட்டு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
சீனாவின் பல்வேறு பகுதிகளில் அமல்படுத்தப்பட்டுள்ள கொரோனா வைரஸ் பொதுமுடக்கம் மற்றும் வழக்கத்திற்கு மாறான அதிக மழையால் தடைபட்டுள்ள காய்கறி விநியோகம் ஆகியவற்றுக்கு நடுவே சீன அரசின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சீன அரசின் இந்த அறிவிப்புக்கு பிறகு அந்நாட்டு பொதுமக்கள் பதற்றத்துக்கு உள்ளாகி பொருட்களை வாங்கி குவித்து வருகின்றனர்.