மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் பாரம்பர்ய அழகுப் போட்டியில், முகத்தில் வர்ணங்கள் பூசியும், பாரம்பர்ய உடையணிந்தும் ஆண்கள் பங்கேற்றனர்.
அந்நாட்டில் நடைபெறும் பழமையான திருவிழாக்களில் ஒன்றான கெரேவோல் எனப்படும் ஆண்களுக்காக அழகுப் போட்டியில், பெண் நடுவர்களே வெற்றியாளரை தேர்ந்தெடுப்பார்கள்.
பெண்களை கவரும் வகையில், போட்டியாளர்கள் மணிக்கணக்கில் நடனமாடும் நிலையில், அவர்கள் காதலராகவோ அல்லது கணவராகவோ இருக்க பொருத்தமானவரா என மதிப்படுப்படுவார்கள்.
நைஜரில் மழைக்காலம் முடிவதை குறிக்கும் வகையில் இந்த போட்டி காலம் காலமாக நடைபெற்று வருகிறது.