எத்தியோப்பியாவின் Amhara மாகாணத்தில் உள்ள 2 நகரங்களை கிளர்ச்சிப்படை கைப்பற்றியதை அடுத்து பிரதமர் அபி அகமது நாட்டில் 6 மாத காலத்திற்கு அவசர நிலையை பிரகடனப்படுத்தி உள்ளார்.
டைக்ரே பகுதியை தனி நாடாக அறிவிக்கக்கோரி இனக் குழுக்களுக்கும், அரசு படைக்கும் எதிராக ஓராண்டுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது.
கடந்த திங்கட்கிழமை தலைநகர் அட்டிஸ் அபபா அருகில் உள்ள கொம்போல்சா, டெஸ்ஸி நகரங்களை கைப்பற்றியதாக இனக்குழு அறிவித்தது. கிளர்ச்சியாளர்கள் தலைநகரை நெருங்கியதை அடுத்து பிரதமர் அபி அகமது நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தி உள்ளார்.