உலக வெப்பமயமாதலை தடுக்க காற்றில் இருக்கும் கார்பனை உறிஞ்சும் பலூனை இஸ்ரேல் ஸ்டார்ட் அப் நிறுவனம் உருவாக்கி உள்ளது.
ஹை ஹோப் லேப்என்ற தனியார் நிறுவனம் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறி காற்றில் கலக்கும் கார்பனை மீண்டும் திட நிலைக்கு கொண்டு வந்து மறுசுழற்சி முறையில் மீண்டும் பயன்படுத்தும் வகையில் உருவாக்கி உள்ளது.
தரையில் இருந்து 50 கிலோ மீட்டர் வானத்தில் காற்றிலிருக்கும் கார்பனை 80 டிகிரி செல்சியஸ் தட்பவெட்பத்தில் திரவ நிலையில் இருந்து திடமான நிலைக்கு மாற்றி அதை உறிஞ்சி பழைய நிலைக்கு கொண்டு வரமுடியும் என நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.