இத்தாலி அருகே கடலில் சிக்கித் தவித்த நபரை கடலோரக் காவல்படையினர் மீட்டனர். சிசிலி தீவு அருகே கடலில் ஒருவர் kitesurfing சென்ற போது திடீரென வானிலை மோசமாகி கடல் சீற்றம் ஏற்பட்டதால் அவரால் கரைக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. நீண்ட நேரமாகியும் அவர் திரும்பாததால் கரையில் காத்திருந்த அவரது நண்பர் கடலோரக் காவல் படையினருக்குத் தகவல் அளித்தார்.
அவர்கள் ஹெலிகாப்டர் மற்றும் படகில் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். Surfing Board-ஐ பற்றியபடி கடலில் தத்தளித்து கொண்டிருந்த அந்த நபர் 5 மணி நேரத் தேடலுக்குப் பின் மீட்கப்பட்டார். மிகவும் சோர்வுடன் காணப்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.