அமெரிக்காவின் வானுயர்ந்த கட்டடம் ஒன்றில் உச்சி வரை சென்று சிறிது நேரம் தொங்கி கொள்ள அனுமதியளித்துள்ளது.
நியூயார்க் நகரில் உள்ள ஹட்சன் யார்ட்ஸ் என்ற பிரமாண்ட கட்டடத்தில் இதற்கான புதிய சுற்றுலா தொடங்கப்பட்டுள்ளது. சுமார் ஆயிரத்து 131 அடிகள் ஏறிய பின், 100வது மாடியில் உள்ள எட்ஜ் என்ற கண்ணாடி தரையைக் கொண்ட அரைக்கோள வடிவிலான இடம் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்காக கால்களை நடுங்க வைக்கும் 161 படிக்கட்டுகளை ஏறி கடந்த பின் எட்ஜில் பாதுகாப்பு பெல்ட் அணிந்து சிறிது நேரம் தொங்கிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.