பால்வெளி மண்டலத்தில் நெபுலாவுக்கு நடுவே பிரமாண்டமான குமிழ் ஒன்றை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஒளியாண்டுகள் தொலைவில் என் 44 என்ற நெபுலா ஒன்று காணப்படுகிறது.
இதன் நடுப்பகுதி சூப்பர் பப்பிள் எனப்படும் நட்சத்திரங்கள் இல்லாத குமிழ் பகுதி உள்ளது. சுமார் 250 ஒளி ஆண்டுகள் அகலம் கொண்டது என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்தப் பகுதி மர்மங்கள் நிறைந்திருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.