நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் செவ்வாய் கிரகத்தில் அம்மோனியா போன்ற கரிம மூலக்கூறுகளைக் கண்டறிந்துள்ளது.
கியூரியாசிட்டி ரோவர் மூலம் செவ்வாய் கிரகத்தின் 22 மைல் நீளமுள்ள சாம்பல் குன்றுகளின் குழுவான பாக்னோல்ட் டூன் என்ற இடத்தில் மண் பகுப்பாய்வு செய்யப்பட்டது. அப்போது, மண்ணில் பென்சாயிக் அமிலம் மற்றும் அம்மோனியா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இவையிரண்டும் மனிதர்கள், தாவரங்கள் மற்றும் விலங்குகளால் இயற்கையாக உற்பத்தியாகின்றன. இதனால் செவ்வாயில் ஏதேனும் உயிர்மங்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.