வோடபோனுடன் சேர்ந்து தங்களது செல்போனில் நடத்திய 5ஜி சோதனையில் வினாடிக்கு 9 புள்ளி 85 ஜிகாபைட் வேகம் எட்டப்பட்டதாக நோக்கியா தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலம் காந்திநகரில் நடத்தப்பட்ட இந்த சோதனையில், 80 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்பெ க்ட்ரத்தில் E- பாண்ட் ஓலிக்கற்றைகள் வாயிலாக back end data transmission-ல் இந்த வேகம் எட்டப்பட்டதாக நோக்கியா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்தும் நோக்கில், வோடபோன் நிறுவனத்திற்கு 26 ஜிகாஹெர்ட்ஸ் போன்ற உயர் அலைவரிசை band களை தொலைத் தொடர்புத் துறை ஒதுக்கியது.
ஒரு ஜிகாபைட் என்பது 1024 மெகாபைட்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.