அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் கடை ஒன்றிற்குள் தீப்பற்றி எரியும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
ப்ரூக்ளின் பகுதியில் உள்ள உணவுப் பொருட்கள் விற்கும் கடை ஒன்றின் மீது ஜோ மங்கல் என்ற நபர் திடீரென பெட்ரோல் குண்டை வீசினார். இதில் அக்கடையின் ஒரு பகுதியில் தீ மளமளவென பற்றிய நிலையில், அதற்கு அருகே நின்ற நபரின் காலணியிலும் தீப்பிடித்தது.
இதனை அடுத்த மற்றொரு பெட்ரோல் குண்டை, ஜோ வீச முயன்றபோது அருகில் நின்றிருந்த நபர் தட்டிவிட்டதால் பெரியளவிலான தீவிபத்து தவிர்க்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் கடைக்குள் பற்றிய தீயை கட்டுக்குள் கொண்டுவந்த நிலையில், தீவைத்த நபர் கைது செய்யப்பட்டார்.