ஆப்கானிஸ்தானில், ராணுவ மருத்துவமனையில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டனர்.
ஆப்கானில் தாலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது முதல் ஐ.எஸ் பயங்கரவாதிகள், தாலிபான்களையும், சிறுபான்மையாக உள்ள ஷியா பிரிவு இஸ்லாமியர்களையும் குறி வைத்து பல்வேறு தாக்குதல்களை நிகழ்த்தி வருகின்றனர்.
இந்நிலையில், தலைநகர் காபூலில் உள்ள ராணுவ மருத்துவமனையின் வாயிலில் இரண்டு குண்டு வெடிப்புகளை நிகழ்த்திய பயங்கரவாதிகள் தொடர்ந்து மருத்துவமனைக்குள் புகுந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.
இதில் 19 பேர் கொல்லப்பட்டதாகவும், 50 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்கள் வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.