ஆப்கானிஸ்தான் உடனான "சம்மன்" எல்லையை பாகிஸ்தான் மீண்டும் திறந்ததை அடுத்து பாகிஸ்தானில் சிக்கித் தவித்த ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் தாயகம் திரும்பினர்.
ஆப்கானில் இருந்து ஏராளமானோர் அகதிகளாக வரக்கூடும் என்பதால் செப்டம்பர் மாத இறுதியில் ”சம்மன்” எல்லையை பாகிஸ்தான் அரசு மூடியது. இரு நாடுகளை இணைக்கும் முக்கிய எல்லை மூடப்பட்டதால், தொழில் ரீதியாக பாகிஸ்தான் சென்ற அப்கானியர்களால் தாயகம் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. பேச்சுவர்த்தையைத் தொடர்ந்து மீண்டும் சம்மன் எல்லை திறக்கப்பட்டது.
ஒரு மாதத்துக்கு மேலாக உணவு மற்றும் தங்கும் வசதி இன்றி பாலிஸ்தானில் தவித்த ஆப்கானியர்கள் மகிழ்ச்சியுடன் தாயகம் திரும்பினர்.