ஈராக்கில், 2,700 ஆண்டுகளுக்கு முன் ஒயின் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட கல் தொட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. டுஹோக் மாகாணத்தில் அகழாய்வில் ஈடுபட்டிருந்த இத்தாலி நாட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், மெசப்பட்டோமிய நாகரிகத்தின் போது, திராட்சை பழங்களை நொதிக்க வைத்து ஒயின் தயாரிப்பிற்காக மலை பாறைகளில் குடைந்தெடுக்கப்பட்ட 14 குழிகளை கண்டு பிடித்தனர்.
2,700 ஆண்டுகள் பழமையான இந்த ஒயின் தொட்டி மத்திய கிழக்கு நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழமையான ஒயின் தயாரிக்கும் தொட்டி என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இதனை யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்தில் சேர்க்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.