சவுதி அரேபியாவில், பெண் ஒருவர் துப்பாக்கி சுடும் பயிற்சியாளராக பணியாற்றி வருவது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மோனா என்ற அந்தப் பெண் சிறுவயதில் தந்தையுடன் வேட்டைக்குச் சென்றபோது துப்பாக்கிகளால் அதிகம் கவரப்பட்டார். கடந்த 5 ஆண்டுகளாக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொண்ட மோனா, தற்போது சவுதியில் உள்ள முன்னணி துப்பாக்கி சுடும் பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். அவரிடம் ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் வந்து பயிற்சி பெற்று வருகின்றனர்.
ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய தொழில் என்பதால் ஆண்களிடம் இருந்து எதிர்பு வரும் என எதிர்பார்த்ததாகவும், ஆனால் பழமைவாத எண்ணம் நிறைந்த பெண்களிடம் இருந்து தான் அதிக எதிர்ப்பு கிளம்பியதாகவும் மோனா தெரிவித்துள்ளார்.