வெனிசுவேலா-வில் ஹாலோவீன் பண்டிகையை முன்னிட்டு வித விதமான வேடங்களில் வலம் வந்த கலைஞர்கள் பைக் சாகசங்கள் மூலம் பார்வையாளர்களுக்கு உற்சாகமூட்டினர்.
தலைநகர் கராகஸின் கிழக்கு முனையில் இருந்து இருந்து மேற்கு முனை வரை சீறிப் பாய்ந்த பைக்குகளில், வீலிங் உள்ளிட்ட வெவ்வேறு சாகசங்களை இளைஞர்கள் நிகழ்த்தினர்.
வெனிசுவேலா-வில் ஏழ்மையான பகுதிகளில் வசிக்கும் இளைஞர்கள் மத்தியில் பைக் சாகசங்கள் பிரபலமாகி வருகின்றன.