ஐஸ்லாந்தில் தென்பட்ட வடதுருவ ஒளி பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. ஆண்டின் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் வடதுருவத்துக்குள் நுழையும் சூரிய ஒளிக்கற்றைகளை, பூமியின் வாயு மண்டல துகள்கள் சிதறடிப்பதால் பச்சை வண்ண ஒளிவெள்ளம் பூமியில் பாயும்.
அரோரா போரியாலிஸ் என்றழைக்கப்படும் இந்த அபூர்வ காட்சி ஐஸ்லாந்து தலைநகர் ரெய்கவிக்-கில் தென்பட்டது. "ஹாலோவீன்" பண்டிகையின் போது, வானெங்கும் பச்சை ஒளி வெள்ளம் பரவிக்கிடந்த காட்சி பார்ப்பவர்களுக்கு மேலும் உற்சாகமூட்டியது.