கொரோனா பேரிடர் கால நிதியுதவிகளை முன்கூட்டியே நிறுத்தக் கூடாது என்றும் உலகப் பொருளாதார வளர்ச்சி மீளும் வரை அது தொடர வேண்டும் என்றும் ஜி 20 நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வளர்ந்த நாடுகளும் வளர்ச்சி பெறும் நாடுகளும் நலிந்த நாடுகளுக்குத் தொடர்ந்து உதவ வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் தடுப்பூசி ஏற்றுமதி கொள்கைகளுக்காக நன்றி தெரிவித்தும் ரோம் பிரகடனத்தில் உலக நாடுகளின் தலைவர்கள் முன்னிலையில் தீர்மானம் நிறைவேறியது.