மெக்ஸிகோவில் ஆயிரம் அண்டுகளுக்கு முன் பண்டைய மாயன் நாகரீகத்தை சேர்ந்த மக்களால் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் சிறிய மரப்படகு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
Chichen Itza என்னும் மாயா நகரத்தின் இடிபாடுகளில் உள்ள குகைக்குள் இந்த சிறிய படகு தென்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1.6 மீட்டர் நீளம் மற்றும் 80 சென்டி மீட்டர் அகலம் கொண்ட இந்த படகு குடிநீர் கொண்டு செல்ல அல்லது சடங்குகளுக்கு தேவைப்படும் பொருட்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் பாதை திட்டத்துக்காக அப்பகுதியில் வேலைகள் நடந்தபோது இந்த படகு கண்டெடுக்கப்பட்டுள்ளது.