ஆப்கானிஸ்தானில் திருமண விழாவில் நடக்கவிருந்த இசை நிகழ்ச்சியை தடுத்து நிறுத்துவதற்காக 13 பேரை தாலிபான்கள் சுட்டுக் கொன்றனர்.
அந்நாட்டின் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சாலே விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், நங்கர்ஹர் என்ற இடத்தில் திருமண நிகழ்ச்சி நடைபெற இருப்பதை அறிந்த தாலிபான் தீவிரவாதிகள் 13 பேரைச் சுட்டுக் கொன்றதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தாலிபான்கள் விடுத்துள்ள அறிக்கையில், வெறும் கண்டனத்தால் மட்டும் தங்களின் ஆத்திரத்தை தீர்த்துக் கொள்ள முடியாது என்று குறிப்பிட்டுள்ளனர். தாலிபான்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதும் இசை மற்றும் பெண் செய்தி வாசிப்பாளர்களுக்கு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.