ஸ்பெயினின் லா பால்மா தீவில் குமுறி வரும் கும்ப்ரே வியஜா எரிமலையிலிருந்து lava bomb எனப்படும் தீப்பிழம்பால் ஆன பெரிய கல் மலையில் உருண்டு வரும் வீடியோ வெளியாகியுள்ளது.
எரிமலை உக்கிரமாக அதிகளவிலான தீப்பிழம்பை கக்கும்போது இந்த லாவா குண்டுகள் உருவாகும் நிலையில், தரையில் விழும்போது உறைந்து திடமான கற்களாக மாறுகின்றன. பொதுவாக இவை 64 மில்லி மீட்டருக்கு மேல் விட்டம் கொண்ட உருண்டையான கற்களாக இருக்கும் என கூறப்படுகிறது.