இயற்கை பேரிடரான சூறாவளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை ஜப்பானைச் சேர்ந்த ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
Challenergy என்னும் நிறுவனம் தயாரித்துள்ள பிரத்யேக காற்றாலை, சூறாவளி காற்று வீசும்போது காற்றின் வேகத்துக்கேற்ப மின்சாரம் தயாரிக்கிறது. சாதாரண காற்றலைகளில் பயன்படுத்தப்படும் ராட்சத பிளேடுகள் புயல் மற்றும் சூறாவளி சமயங்களில் சேதமடைகின்றன.
அவற்றைப் போல இல்லாமல் ,Challenergy-ன் காற்றாலைகள், காற்றின் திசையில் ஏற்படும் மாற்றங்களால் பாதிக்கப்படுவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் ஆண்டுக்கு சராசரியாக 26 முறை சூறாவளி தாக்குவதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.