ஜப்பான் இளவரசி மகோ மோசடி புகாரில் சிக்கிய பெண்மணியின் மகனை திருமணம் செய்ததை கண்டித்து நூற்றுக்கணக்கானோர் பேரணி சென்றனர். இளவரசி மகோ தன் கல்லூரி பருவ காதலன் கெய் கொமுரோ-வை காதலித்து கரம் பிடித்துள்ளார்.
2017 ம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றதை தொடர்ந்து கொமுரோ-வின் தாயார் பண மோசடி புகாரில் சிக்கி கொண்டதால் திருமணம் தள்ளி போனது.
இருவருக்கும் இடையே தற்போது திருமணம் நடைபெற்ற நிலையில் அரச குடும்பம், மோசடி புகாரில் சிக்கிய குடும்பத்துடன் சம்மதம் வைத்தததை கண்டித்து டோக்கியோவில் பேரணி நடைபெற்றது.
தற்போது டோக்கியோவில் வசிக்கும் மகோ, விரைவில் பாஸ்போர்டிற்கு விண்ணப்பித்து கணவருடன் அமெரிக்காவின் நியூ யார்க் நகர் சென்று வசிக்க உள்ளார்.