தென் கொரியாவில் உள்ள பூங்காவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள Squid Game பொம்மை சிறுவர்களுக்கு உற்சாகமூட்டியது.
Netflix-ல் வெளியான Squid Game வெப் தொடர் உலகெங்கும் அமோக வரவேற்பை பெற்றது. ஒரு கோடியே 42 லட்சம் சந்தாதாரர்கள் கண்டு களித்துள்ள இந்த வெப் தொடரின் முக்கிய பகுதியில் யோங்கீ எனப்படும் தென் கொரிய பொம்மையை மையமாக வைத்து நடைபெறும் விளையாட்டு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.
தற்போது Netflix நிறுவனம் தலைநகர் சியோலில் உள்ள பூங்காவில் அதே போல் 13 அடி உயர யோங்கீ பொம்மையை நிறுவியது. Squid Game தொடரில் வருவதை போலவே சிறுவர்கள் அந்த பொம்மையை நோக்கி விளையாடி பொழுது போக்கினர்.