விண்வெளியில் மிதக்கும் சிதைகூலங்களை அகற்றவும், அவை ஏற்படாமல் தடுக்கவும் உதவும் தொழில்நுட்பங்களை சோதனை செய்ய, புதிய செயற்கைக்கோள் ஒன்றை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
விண்ணில் காலாவதியான செயற்கைகோள்கள், சுற்றுவட்ட பாதையிலிருந்து விலகி செல்லும் செயற்கைகோள்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான சிதைகூலங்கள் மிதக்கின்றன.
இந்நிலையில், Shijian-21 என்று பெயரிடப்பட்டுள்ள சீன செயற்கைகோள், ஸிசுவான் மாகாணத்தின் ஜிசாங் செயற்கைகோள் ஏவு தளத்திலிருந்து Long March-3B ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள் வெற்றிகரமாக அதன் சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.