அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில், உலகப் புகழ் பெற்ற ஓவியரான பிகாசோ-வால் தீட்டப்பட்ட 11 ஓவியங்கள் 817 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனையானது.
பிரபல சூதாட்ட விடுதியான எம்.ஜி.எம் ரிசார்ட்ஸ்-க்குச் சொந்தமான பெலாஜியோ நட்சத்திர விடுதியில் நெடுங்காலமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்த பிகாசோ-வின் 11 ஓவியங்கள் 817 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.
இதில் 1938ம் ஆண்டு அவர் தீட்டிய ”ஃபெமி ஒள பெரெட் ரோக் ஆரஞ்ச்” என்ற ஓவியம் அதிகப்பட்சமாக 300 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆனது. வரும் நாட்களில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், கருப்பினத்தவர்களின் ஓவியங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து காட்சிப்படுத்தப் போவதாக எம்.ஜி.எம் நிறுவனம் அறிவித்துள்ளது.