வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை சம்பவங்களை கண்டித்து அந்நாட்டில் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்மையில் அங்கு நடைபெற்ற துர்கா பூஜையின் போது புனித நூலான குரான் அவமதிக்கப்பட்டதாக வதந்தி பரவியதால், சில பகுதிகளில் இந்துக்களின் வீடுகள், வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் 7 பேர் உயிரிழந்த நிலையில், பலர் காயமடைந்தனர். இதனை கண்டிக்கும் வகையில், 60-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறுபான்மையினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வங்கதேசத்தில் சட்டமும், நிர்வாகமும் சிறுபான்மையினரை, குறிப்பாக இந்து மக்களைப் பாதுகாக்க தவறிவிட்டதாக பேரணிக்கு ஏற்பாடு செய்த வங்கதேச இந்து-புத்த கிறிஸ்தவ ஒற்றுமை கவுன்சிலின் தலைவர் ராணா தாஸ்குப்தா தெரிவித்தார்.
இந்நிலையில், வன்முறையில் ஈடுபட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து அமைப்புகளின் தலைவர்களிடம் பிரதமர் ஷேக் ஹசீனா உறுதி அளித்தார்.