டி-20 உலகக்கோப்பை லீக் சுற்றில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது.
அபு தாபியில் நடைபெற்ற 13வது லீக் சுற்று ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்ரிக்க ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவரில் 9 விக்கெட்களை இழந்து 118 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியின் மார்க்ரம் அதிகப்பட்சமாக 40 ரன்களை குவித்தார்.
எளிய இலக்கை சேஸ் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு தென் ஆப்ரிக்க பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடியை அளித்தனர். சீரான இடைவெளியில் ஆஸ்திரேலிய அணி விக்கெட்களை இழந்த போதும் ஸ்டொய்னிஸ் மற்றும் மேத்யூ வேட் இணைந்து ஆஸ்திரேலியாவை வெற்றி பெறச் செய்தனர்.