புதிய மாறுபாடு கொண்ட டெல்டா வகை வைரஸ் ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் காணப்படுவதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
இதுகுறித்து விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், புதிய உருமாறிய டெல்டா வகை வைரசான ஏ ஒய் 4 பாயின்ட் 2 என்ற புதிய வைரஸ் பல ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளில் இருந்து பரவியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்த வைரஸ் அதிகமாக பரவக்கூடியது என்பதற்கான தெளிவான அறிகுறி எதுவும் இல்லை என்று குறிப்பிட்டுள்ள உலக சுகாதார அமைப்பு, ஆல்பா மற்றும் டெல்டா வகைகள் போன்ற பெரிய அச்சுறுத்தல் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.