ஒலியை விட 5 மடங்கு வேகமாகச் செல்லும் ஹைப்பர் சோனிக் ஏவுகணை தொழில்நுட்பத்தை அமெரிக்கா சோதனை செய்துள்ளது.
வெர்ஜீனியாவில் உள்ள நாசா ஆய்வு மையத்தில் ஹைப்பர் சோனிக் வகை ஏவுகணை தொழில்நுட்பத்தை சோதித்துப் பார்த்ததாக அமெரிக்கக் கடற்படை தெரிவித்துள்ளது. இதுபோன்ற புரோட்டோ டைப் ஏவுகணைகள் மற்ற ஏவுகணைகளை விடவும், குறிப்பாக ஒலியை விட 5 மடங்கு வேகமாகச் செல்லும் திறன் கொண்டது.
இதேபோன்ற ஏவுகணை தொழில்நுட்பத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் சீனா சோதனை செய்து பார்த்தது. இதுபோன்ற தொழில்நுட்பத்தை ரஷ்யாவும் ஏற்கனவே கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.