ஆப்கானிஸ்தான் எல்லை அருகே பல ஆண்டுகளுக்குப் பின், தஜிகிஸ்தான் மற்றும் ரஷ்ய ராணுவ வீரர்கள் கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டனர்.
ஆப்கானிஸ்தானின் அண்டை நாடுகளில் தஜிகிஸ்தான் மட்டும் தாலிபான்களின் தலைமையை அங்கீகரிக்காததால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நீடிக்கிறது.
இரு நாடுகளும் எல்லையில் படைகளை குவித்துள்ளன. இந்நிலையில், தஜிகிஸ்தானிற்கு வலுசேர்க்கும் விதமாக ரஷ்யா மற்றும் தஜிகிஸ்தானைச் சேர்ந்த 5,000 ராணுவ வீரர்கள் போர்ப் பயிற்சி மேற்கொண்டனர்.